மார்ச் 2ம் தேதி வரை தமிழகத்திற்கு எச்சரிக்கை..!

தமிழகத்தில் வருகிற மார்ச் மாதம் இரண்டாம் தேதி ஒரு சில மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்று பிப்ரவரி 27 மற்றும் 28 ஆம் தேதி தமிழகம், புதுகை போன்ற மாவட்டங்களில் வறண்ட வானிலையே காணப்படும். 

தென் கிழக்கு வங்க கடலோர பகுதிகளில் சூறாவளி வீசப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வரும் மார்ச் 1ஆம் தேதி தென்கிழக்கு மற்றும் தென் மேற்கு வங்க கடல் பகுதியில் சூறாவளி 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசப்படும் எனவும் கூறப்படுகிறது.

அதைப் போன்றே மார்ச் 2-ஆம் தேதியன்று தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று வீசக்கூடும் எனவும் இந்த தினங்களில் மீனவர்கள் கடலுக்கு செல்ல கூடாது எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது

Comments